புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி அக்னியாற்று ஓடு பாலத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதை ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சமூக நலத்துறை அரசு செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
இதேபோன்று, அதிரான்விடுதியில் அரசர்குளம், புதுமாவடிக்குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதையும் ஆய்வு செய்தனர்.