Regional02

வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2021-ம் ஆண்டுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் செலவினங்களை உடனடியாக வழங்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தல் மதிப்பூதி யத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் அன்சாரி தலைமை வகித்தார்.

கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டப் பொருளாளர் ஓ.பி.ஆர்.செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவல கம் முன்பு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சரவணன், பொருளாளர் குமரி அனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

SCROLL FOR NEXT