Regional02

திருச்சி அருகே - அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் கோப்பு கிராமத் தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூதாட்டி நேற்று உயிரிழந்தார்.

சோமரசம்பேட்டையை அடுத்துள்ள கோப்பு கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்த பழனிவேல் மனைவி வசந்தா(70). இவர் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

SCROLL FOR NEXT