Regional02

கஞ்சா விற்ற மூவர் கைது :

செய்திப்பிரிவு

செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கோயில் அருகே மோட்டார் சைக்கிளுடன் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். போலீஸார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது, அதில் 1.5 கிலோ கஞ்சா இருந்தது.

திருநெல்வேலி மாவட்டம் குறிச்சி உடையார்குளம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் பூல்பாண்டி (21), மாடசாமி மகன் இசக்கிமுத்து (19) மற்றும் திருநெல்வேலி பர்கிட் மாநகரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திகேயன் (21) ஆகிய அந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்து, மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT