Regional02

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்று மீண்டும் விசாரணை :

செய்திப்பிரிவு

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் பொன்முடி ஆஜரானார். அவரது மனைவி விசாலாட்சி ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு தொடர்பாக சேர்க்கப்பட்டுள்ள சாட்சிகளில் பழனிச்சாமி என்பவர் உடல்நலக் குறைவால் இறந்து விட்டதால் அவரது இறப்பு சான்றிதழ் சமர்பிக்கப்பட்டது. மேலும் மற்றொரு சாட்சியான ஓய்வு பெற்ற வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கையண்ணன் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை ஆஜர்படுத்த முடியவில்லை என்றுகூறி, மருத்துவ சான்றிதழை போலீஸார் சமர்ப்பித்தனர். தொடர்ந்து, மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதற்காக இன்று (நவ.10) மீண்டும்இவ்வழக்கின் விசாரணை நடைபெறும் என்று நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT