பெட்ரோல், டீசல் விலை உயர் வை கண்டித்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணைச் செயலாளர் சந்திரபோஸ் தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் விஷ்ணு வர்த்தன், மாவட்டச் செயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.