Regional01

விருதுநகர் அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம் மீட்பு :

செய்திப்பிரிவு

விருதுநகர் அருகே பாதி உடல் எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.

விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகணேஷ் (24). திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பைக்கில் வெளியே சென்றார். இரவு வரை வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், எரிச்சநத்தம் அருகே சாலையோரத்தில் பைக் மற்றும் பாதி எரிந்த நிலையில் செல்வகணேஷின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. எம்.புதுப்பட்டி போலீஸார் சடலத்தைக் கைப் பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், செல்வகணேஷை கொலை செய்தது யார் என்பது குறித்தும் கொலைக்கான காரணம் குறித்தும் எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT