காதல் கணவரை மீட்டுத் தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்தார்.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ். நகரை சேர்ந்தவர் நந்தினி(23). இவர், திருச்சி மாவட்டம் வையம்பட்டி கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி கர்ப்பிணியாக இருந்தபோது கார்த்திக், நந்தி னியை விட்டுவிட்டுச் சென்று விட்டார். இதுதொடர்பாக கார்த்திக்கின் பெற்றோரிடம் கேட்டபோது முறையான பதில் இல்லை.
இதுகுறித்து நந்தினி மகளிர் காவல் நிலையத்திலும் திண் டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் நேற்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்துக்கு தனது கணவரை மீட்டுத் தரக்கோரி மனு அளிக்க கைக்குழந்தையுடன் வந்தார். அப்போது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் நந்தினியை தடுத்து ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து திண்டுக்கல் அருகே ஏ.கல்லுப்பட்டியை சேர்ந்த ஸ்டெல்லாராணி என்பவர், தனது பூர்வீகச் சொத்தை தனது பெரியப்பா மகன் ஆக்கிரமித்துக் கொண்டதாகவும், அதை மீட்டுத் தரக்கோரியும் திண்டுக்கல் ஆட்சி யர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றார்.
இவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.