Regional03

சிவகங்கையில் குழந்தை சடலம் மீட்பு :

செய்திப்பிரிவு

சிவகங்கையில் அழுகிய நிலையில் கிடந்த பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மஜித் ரோட்டில் உள்ள மாவட்ட நூலகம் எதிரே பச்சிளம் ஆண் குழந்தையின் அழுகிய சடலம் பாலிதீன் பையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத் தனர்.

டவுன் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

குழந்தையை சாலையில் வீசி சென்றவர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT