Regional01

ஆண்டிமடம் அருகே சாலை துண்டிப்பு :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர்மழையின் காரணமாக ஆண்டிமடம் அருகே சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து மழை பெய்தது. ஆண்டிமடத்தை அடுத்த திருக்களப்பூர் கிராமத்தில் உள்ள செங்கால் ஓடையில் அதிகளவு மழைநீர் சென்றதால் திருகளப்பூர்- இறவாங்குடி சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலத்தின் பக்கவாட்டில் மண்அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்தை பார்வையிட்ட எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், சிவாஜி, வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட பலரும் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT