தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புறாக்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்திய பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பினர். (அடுத்த படம்) வாறுகால் அமைக்க கோரிய வெம்பூர் கிராம மக்கள். (கடைசி படம்) தந்தையின் ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்க கோரிய சுதந்திர போராட்ட தியாகியின் மகள் இந்திரா. படங்கள்: என்.ராஜேஷ் 
Regional01

10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் மேல்முறையீடு கூடாது - புறாக்களை பறக்கவிட்டு சமூக நீதி கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று 146 பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் மற்றும் 115 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள், சீர்மரபினர் என,சமூகநீதி கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமூகநீதியை காப்பாற்ற வேண்டும் என புறாக்களை பறக்கவிட்டனர். பின்னர் ஆட்சியர் கி.செந்தில் ராஜிடம் அளித்த மனு விவரம்:

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக் கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 1-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தின் சமூகநீதியை பாதுகாக்கும் வகையில் இந்ததீர்ப்பு அமைந்துள்ளது. இதனைஎதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது. மேலும், 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க உடனடியாக புள்ளிவிவர சேகரிப்பு சட்டத்தின் கீழ்மக்கள் தொகை, கல்வி, சமூக நிலைமற்றும் அரசியலில் அவர்களின்பிரதிநிதித்துவம் போன்ற புள்ளிவிவரங்களை சேகரிக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டை கல்வி, வேலைவாய்ப்புகளில் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாறுகால் அமைப்பது எப்போது?

கருணை கொலை

SCROLL FOR NEXT