தூய்மை பணியில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை அருணை இயக்க காவலர்களுக்கு ஊக்க தொகை வழங்கிய நகர ஒருங்கிணைப்பாளர் கார்த்திவேல்மாறன். 
Regional03

தூய்மை அருணை இயக்கம் சார்பில் : காவலர்களுக்கு ஊக்கத்தொகை :

செய்திப்பிரிவு

தி.மலை தூய்மை அருணை இயக்கம் சார்பில் தூய்மைப்பணியை சிறப்பாக செய்து வரும் 50 தூய்மை காவலர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணா மலையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை நகரம் 4-வது வார்டு பெரியார் சிலை முதல் ரவுண்டானா வரை மற்றும் கெங்கையம்மன் கோயில் முதல் ரயில் நிலையம் வரை, அருணை தூய்மைப் பணியாளர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஞாயிற்றுக்கிழமைகளில் தூய்மை பணி மற்றும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை சிறப்பாக செய்துவருகின்றனர்.

இதனால், அப்பணியில் ஈடுபட்டுள்ள 50 பேரை கவுரவிக்கும் வகையில் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகே நடைபெற்றது. 4-வது வார்டு ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். 50 அருணை தூய்மை காவலர்களுக்கு ஊக்கத் தொகை தலா ரூ.500-ஐ நகர ஒருங் கிணைப்பாளர் கார்த்திவேல்மாறன் வழங்கினார். இதில், தூய்மை அருணை காவலர்கள் சுதாகர், பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT