Regional02

ஈரோட்டில் போலீஸார் கண்காணிப்பு தீவிரம் - ஹெல்மெட் அணியாத 250 பேரிடம் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூல் :

செய்திப்பிரிவு

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய 250 பேரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார், ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகை காரணமாக இந்த நடைமுறையை சற்று தளர்த்திய போலீஸார், கடந்த இரு நாட்களாக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, மேட்டூர் சாலை, ஸ்வஸ்திக் கார்னர், வீரப்பன்சத்திரம், கருங்கல் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதித்தனர்.

நேற்று மதியம் வரை ஹெல்மெட் அணியாத 250 வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.100 வீதம் ரூ.25 ஆயிரம் விதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT