Regional01

மீனவர் நிவாரணத்தில் கடன் பிடிக்கப்படாது மதுரை எம்பி தகவல் :

செய்திப்பிரிவு

சு.வெங்கடேசன் எம்.பி. வெளி யிட்ட செய்திக் குறிப்பு:

மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணத்தை தமிழக அரசு வழங்குகிறது. ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தில் உள்ள அரசு வங்கியில் இந்த நிவாரணத்தில் இருந்து கல்வி, நகைக்கடன் பிடித்தம் செய்வதாக மீனவர் ஒருவர் சமூக வலை தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனால் மீனவர்கள் எவ்வாறு வாழ்க்கை நடத்த முடியும்?. மீனவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தொகையில் பிடித்தம் செய்திருந்தால் மறு வரவு வைக்க வேண்டும் என வங்கி மண்டல அதிகாரிகளிடம் பேசினேன். அதிகாரிகள், நிவாரணத் தொகையில் கடன் பிடித்தம் செய்யப்படாது என உறுதி அளித்துள்ளனர்.

SCROLL FOR NEXT