Regional02

உதகையில் பேருந்து சேவை குறைப்பு :

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி விடுமுறையின் போது,பேருந்துகள் போதுமான அளவுஇயக்கப்படவில்லை எனவும், குறிப்பாக உதகை, குன்னூர் இடையே பேருந்து சேவை குறைக்கப்பட்டதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், கோவை, திருப்பூர் உட்பட வெளியூர் அரசுப் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் உள்ளூர் மக்களும் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டதால் பயணிகள்பல மணி நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.விடுமுறைக் காலங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT