Regional01

பட்டாசுக் கழிவுகள் அகற்றும் பணி தீவிரம் :

செய்திப்பிரிவு

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீபாவளியையொட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் மலைபோல் தேங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களிலும் பட்டாசுக் கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன.

இவற்றை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 100 தூய்மைப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் முதல் அவற்றை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து நேற்றும் பட்டாசுக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஓரிரு தினங்களில் முழுமையாக அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT