Regional01

பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள சின்ன வெண்மணி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி மகன் பாரதிராஜா(14). இவர், கொத்தவாசல் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் சின்ன வெண்மணி கிராமத்தில் உள்ள வேலன் குட்டையில் குளிப்பதற்காகச் சென்ற பாரதிராஜா, கரையின் மேலிருந்து குட்டைக்குள் குதித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று, பொதுமக்கள் உதவியுடன் மாணவனின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து குன்னம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT