Regional01

தச்சநல்லூரில் உடும்பு பிடிபட்டது :

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் கடந்த 1 வாரமாக மழை பெய்துவரும் நிலையில், குடியிருப்புகளை சூழ்ந்து தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலை யில் தச்சநல்லூர் வடக்கு தெருவில் சீனிவாசன் என்பவரது வீட்டுக்குள் நேற்று நண்பகலில் உடும்பு ஒன்று நுழைந்தது. தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று அந்த உடும்பை பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு படையினர் கூறும்போது, ``பிடிபட்டுள்ள உடும்பு 20 கிலோ எடையுள்ளது. 8 முதல் 9 வயதுள்ள பெண் உடும்பு என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT