Regional02

இளைஞருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி (30). இவரது நண்பர் தூத்துக்குடி பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த விவேக் (25). குருமூர்த்தி கடந்த2 ஆண்டுகளுக்கு முன்பு விவேக்கிடம் அவரது மோட்டார் சைக்கிளை வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் விவேக்கிடம் திருப்பிக் கொடுக்கும் போது மோட்டார் சைக்கிள் பழுதாகி இருந்துள்ளது. அதனை சரிசெய்வதற்கு குருமூர்த்தி பணம் ஏதும் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக 2 பேருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது. நேற்றுமுன்தினம் இதுதொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குருமூர்த்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. தூத்துக்குடி வடபாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விவேக், பட்டுராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தார்.

SCROLL FOR NEXT