ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 235 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் வரும் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை இருக்காது என கூறப்படுகிறது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஏற்கெனவே பெய்த மழையின் காரணமாக பாலாற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருக்கிறது. அதேபோல், பாலாற்றின் துணை ஆறுகளிலும் நீர்வரத்து இருப்பதால் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளை நம்பியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மழையளவு விவரம்
ஏரிகள் நிலவரம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் தற்போதுவரை 165 ஏரிகள் முழுமையாக நிரம்பி யுள்ளன. 18 ஏரிகளில் 75%-க்கும்அதிகமாகவும், 50% அதிகமாக 37 ஏரிகளிலும், 25% அதிகமாக 70 ஏரிகளிலும், 25%-க்கும் குறைவாக 79 ஏரிகளிலும் நீர் இருப்பு உள்ளன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள 49 ஏரிகளில் 18 ஏரிகள் முழுமையாக நிரம்பி யுள்ளன. 75%-க்கும் அதிகமாக 4 ஏரிகளிலும், 50%-க்கும் அதிகமாக 5 ஏரிகளிலும், 25%-க்கும் அதிகமாக 2 ஏரிகளிலும், 20 ஏரிகளில் 25%-க்கும் குறைவாகவும் நீர் இருப்பு உள்ளன. ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 11,466.80 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இதில், 7,988.73 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அணைகள் நிலவரம்
அதேபோல், காட்பாடி அருகேயுள்ள ராஜாதோப்பு அணை 24.57 அடி உயரத்துடன் 20.52 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். தற்போது, அணையில் 19.52 அடி உயரத்துடன் 11.29 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்ப உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரே நீர்த்தேக்க அணையான ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் 26.24 அடி உயரத்துடன் 112.20 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணை முழுமையாக நிரம்பியதால் நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வரப்பெற்ற 43.79 கன அடி நீரை அப்படியே வெளியேற்றினர்.