கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் நெடுங்கல் தடுப்பணை வழியாக சீறப் பாய்ந்து செல்கிறது. படம்: எஸ்.கே.ரமேஷ் 
Regional02

கிருஷ்ணகிரி, தருமபுரியில் கனமழை; சந்தூரில் வீடு சுவர் இடிந்து சேதம் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஓசூர், தளி, போச்சம்பள்ளி, சூளகிரி, பாரூர் உள்ளிட்ட பகுதியில் இரவு 8 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேல் கொட்டித் தீர்த்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு மில்லிமீட்டரில்:

ஓசூரில் 40, தளி 25, சூளகிரி 23, பாரூர் 21, நெடுங்கல் 16.20, ஊத்தங்கரை 9.80, போச்சம்பள்ளி, பெனுகொண்டாபுரத்தில் தலா 6 மிமீ மழை பதிவாகி இருந்தது.

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 748 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 640 கனஅடியும், பாசன கால்வாயில் விநாடிக்கு 88 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் 11 தடுப்பணைகளை கடந்து கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. கெலவரப்பள்ளி அணையில் 41 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதேபோல் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 744 கனஅடியாகவும், அணையில் இருந்து விநாடிக்கு 615 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் 51.15 அடிக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

வீடு சேதம்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

அதுவே நேற்று காலை 10 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. நேற்று முன்தினம் காவிரியாற்றில் பெய்த மழையால் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. மழை மற்றும் கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வருவதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT