Regional01

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சண்முகநல்லூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40). இவர், சின்னகோவிலான்குளத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரை கொலை செய்த வழக்கில் ஊத்துமலை போலீஸாரால் கைது செய்யப்பட்டடு, சிறையில அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சுரேஷ்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு எஸ்பி கிருஷ்ணராஜ் பரிந்துரை செய்தார். ஆட்சியர் கோபால சுந்தரராஜ் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT