Regional01

பெரம்பலூர் அருகே - இருதரப்பினரிடையே மோதலில் போலீஸ்காரர் உட்பட 7 பேர் காயம் :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் தெரணி கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சாமி கும்பிடச் சென்ற ஒருதரப்பைச் சேர்ந்த பெண்களை, மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஆண்கள் சிலர் குடிபோதையில் சீண்டி யுள்ளனர்.

இது தொடர்பாக இருதரப்பி னரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், இருதரப்பினரும் கல், கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் இருதரப்பிலும் 4 வீடுகள் சேதமடைந்தன. பாடாலூர் காவல்நிலைய தனிப் பிரிவு காவலர் சதீஷ்குமார் உட்பட 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த பாடாலூர் போலீஸார் தெரணி கிராமத் துக்குச் சென்று அமைதி ஏற்படுத்தினர். மேலும், இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து இருதரப்பையும் சேர்ந்த 13 பேரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT