Regional01

தெப்பக்குளத்தில் தொழிலாளி உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் முதல் தெருவைச் சேர்ந்த செல்லப்பா மகன் மாரிமுத்து (45). கட்டிடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. நேற்று காலை தூத்துக்குடி சிவன் கோயில் தெப்பகுளத்தின் சுவரில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டி ருந்தார். எதிர்பாராதவிதமாக தெப்பகுளத்தில் தவறி விழுந்து விட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். அதற்குள் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு படையினர் அவரது சடலத்தை மீட்டனர். தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT