Regional01

கரோனா தடுப்பூசி போடாதவர்கள் விவரம் கணக்கெடுக்கும் பணி :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.

தமிழகத்தில் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு முகாம் மூலம் இதுவரை 65 சதவீதம் பேர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 35 சதவீதம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை மாநில சுகாதாரத்துறை செய்து வருகிறது.

வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று வீடு, வீடாக சென்று கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரம், செலுத்தாதவர்கள் விவரம், அவர்களுடைய ஆதார் அட்டை எண், செல்போன் எண், தடுப்பூசி செலுத்தாததற்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து அந்த தகவல்களை பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT