திருப்பூர் 15 வேலம்பாளையம் அடுத்த சோளிபாளையத்தை சேர்ந்தவர் முனிராமன் (47).கட்டிடத் தொழிலாளி. இவர்அங்கேரிபாளையம் வெங்கமேட்டில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் உயிரிழந்தார். தகவலின்பேரில் அனுப்பர்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அனுப்பர்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.