உடுமலை வட்டார போக்கு வரத்து ஆய்வாளர் செல்வதீபாகூறியதாவது:
போக்குவரத்து துறை அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், உடுமலையில் வாகன தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களுக்கு தனியார்ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கூடுதல் கட்டணம் வசூல், அடிப்படை வசதிகள் இல்லாதது, முறையானஆவணங்கள் இன்றி இயக்கப் படுவது போன்ற புகார்களின் அடிப்படையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு விதிமீறல்களுக்காக 5பேருந்துகளுக்கு மொத்தம் ரூ.12,500அபராதம் விதிக்கப்பட்டது. இன்சூரன்ஸ், எப்.சி இல்லாமல் இயக்கப்பட்ட பேருந்து உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.