Regional04

மளிகைக் கடையில் பட்டாசு விற்றவர் கைது :

செய்திப்பிரிவு

உரிய அனுமதி பெறாமல் மளிகைக்கடையில் பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி காந்தி நகரில், உள்ள மளிகைக்கடையில் போலீஸார் நடத்திய சோதனையில், பட்டாசுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உரிய அனுமதி பெறாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமலும் பட்டாசு விற்னை செய்த மளிகைக்கடை உரிமையாளர் தங்கராஜ் மைக்கேலை (46) போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

SCROLL FOR NEXT