Regional01

தொடர் மழையால் - புதுவையில் வேகமாக நிரம்பும் நீர்நிலைகள் :

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு காரணமாக புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் பொழியத் தொடங்கிய மழை இடையிடையே விட்டு பெய்தது. இரவு முழுவதும் இடைவிடாது மழை கொட்டியது. நேற்றும் காலை முதல் மழை பெய்தது. இதன்படி நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை புதுச்சேரி பகுதியில் 83. 6 மி.மீ, பத்துக்கண்ணு பகுதியில் 81 மி.மீ, பாகூர் பகுதியில் 59 மி.மீ, திருக்கனூர் பகுதியில் 54.0 மி.மீ அளவில் மழை பதிவாகியிருந்தது.

தொடர் மழையால் தாழ்வான இடங்கள், வீடுகளைச் சுற்றிலும் மழைவெள்ளம் சூழ்ந்தது. விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. சாலையோரம் வசிப்போர், கூரை வீடுகளில் வசிப்போர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

தொடர் மழை பொழிவினால் புதுச்சேரியில் உள்ள படுகை அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. பெரிய ஏரிகளான ஊசுடு ஏரி, பாகூர் ஏரிகள் உள்ளிட்ட 84 நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

SCROLL FOR NEXT