கடலூர் மாவட்ட அறிஞர் அண்ணா தனியார் பேருந்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் தீபாவளி நலத்திட்ட உதவிகளை சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முகுந்தன் வழங்கினார். 
Regional02

கடலூரில் 300 தனியார் பேருந்து ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் :

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்ட அறிஞர் அண்ணா தனியார் பேருந்து பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலூரில் நடைபெற்றது. நிகழ்வுக்கு சங்கத்தின் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். பொருளாளர் வேலவன், செயலா ளர் சுந்தர்ராஜன், துணைத் தலை வர் ரகுராம், ஆலோசகர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கோவிந்தன் வரவேற்றார். விழாவில் சங்க சட்ட சங்க ஆலோசகர் வழக்கறிஞர் முகுந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு300 பேருந்து பணியாளர் களுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கினார். இதில் காவல் ஆய்வாளர் கவிதா, மக்கள் அதிகாரம் மண்டல ஒருங் கிணைப்பாளர் பாலு, மீனவர் அமைப்பு கஜேந்திரன், தமிழர் கழகம் பரிதி வாணன் மற்றும் கார்த்திகேயன், சண்முகம், முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT