Regional01

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட பேச்சு போட்டி : நவ.12-ல் உலக தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

மதுரை தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பேச்சுப்போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி நவ.14ம் தேதி ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி நவ.12-ம் தேதி பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன. பள்ளி மாணவர்களுக்கான போட்டி காலை 10 மணியளவிலும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டி பிற்பகல் 3 மணியளவிலும் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்திலுள்ள கூட்டரங்கில் நடைபெறும்.

பள்ளி, கல்லூரி அளவில் முதல்கட்ட பேச்சுப்போட்டி நடத்தி பள்ளி மாவட்ட அளவிலான போட்டிக்கு தலா 25 மாணவர்களை முதன்மைக் கல்வி அலுவலர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநரால் பரிந்துரை செய்யப்படும் மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT