Regional02

மதுரை விளாச்சேரி அருகே - வாகனம் மோதி பொறியாளர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

மதுரை விராட்டிபத்துவைச் சேர்ந்தவர் நாகராஜ். சமீபத்தில் இவர் உயிரிழந்தார். இவரது மகன் ராஜேந்திரபிரசாத் (27). பொறியில் பட்டதாரியான இவர், தனியார் பில்டிங் கான்டிராக்டராக இருந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று காலையில் பணி நிமித்தமாக திருநகர் பகுதிக்கு தனது பைக்கில் சென்றுவிட்டு, மதியம் 2 மணியளவில் விராட்டிபத்து நோக்கி நான்குவழிச் சாலையில் திரும்பினார்.

விளாச்சேரி மொட்டைமலை பகுதியில் பின்னால் வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸார் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT