சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி. 
Regional02

: சிவகங்கையில் வாக்குப் பதிவு இயந்திரம் சரிபார்க்கும் பணி

செய்திப்பிரிவு

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங் கியது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நவ.24-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து சில நாட்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் இருந்த வாக்குப்பகுதி இயந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் சரிபார்க்கும் பணி நடந்தது.

இதனை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பார்வை யிட்டார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) லோகன், சிவகங்கை நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரன், பொறியாளர் பாண்டீஸ்வரி உடன் இருந்தனர்.

மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் உள்ள 168 வார்டுகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக 947 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டுக் கருவிகள், 1,945 வாக்குச்சீட்டு பொருத்தும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

SCROLL FOR NEXT