Regional02

அரசு வேலை வாங்கி தருவதாக - ரூ.3 லட்சம் மோசடி :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கால் கிராமத்தைச் சேர்ந்த பச்சம்மாள் மகன் சத்தியராஜ் (29). இவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த தேவன், நாகேந்திர ராவ் ஆகியோர் 2019-ல் பணம் பெற்றுள்ளனர். தேவன் வங்கிக் கணக்குக்கு ரூ.10,000, நாகேந்திர ராவ் வங்கிக் கணக்குக்கு ரூ.2.90 லட்சத்தை சத்தியராஜ் அனுப்பியுள்ளார். ஆனால் அரசு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. சென்னை டிஜிபி அலுவலகத்தில் சத்யராஜ் புகார் மனு அளித்தார். அதன் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், தேவன், நாகேந்திர ராவ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT