Regional04

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் - தள்ளி போகும் மானாமதுரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் :

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி யாகத் தரம் உயர்த்தப்பட்ட மானாமதுரையில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளி போகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகள், மானாமதுரை உட்பட 12 பேரூராட்சிகள் இருந்தன. சமீபத்தில் சட்டப் பேரவையில் மானாமதுரை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் மானாமதுரையில் 18 வார்டுகள் உள்ளன. மேலும் மானாமதுரையை ஒட்டியுள்ள கல்குறிச்சி, கீழமேல் குடி, செய்களத்தூர், மாங்குளம், கீழப்பசலை, சூரக்குளம் -பில்லறுத்தான் ஆகிய ஊராட்சிகளையும் இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்த நட வடிக்கை எடுக்கப்பட்டது.

பல்வேறு காரணங்களால் மானாமதுரை பேரூராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய் யாமலேயே, அப்படியே நகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டது.

தொடர்ந்து வார்டுகள் மறுவரையறை செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நவ.24-ம் தேதி வெளியிடப்பட உ்ள்ளது.

அதைத் தொடர்ந்து, சில நாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் மறு வரையறை பணி முடிவடைய வாய்ப்பில் லாததால், மானாமதுரை நகராட்சிக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT