Regional01

பேரன் கட்டையால் தாக்கியதில் தாத்தா உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் வி.கை காட்டி அருகே உள்ள காடு வெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு(90). இவருக்கும், இவரது பேரன் அசோக்குமார்(35) என்பவருக் கும் சொத்து தொடர்பாக தக ராறு இருந்து வந்துள்ளது. இந் நிலையில், நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப் போது, ஆத்திரமடைந்த அசோக் குமார் அங்கு கிடந்த கட்டையால் அய்யாவுவை தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் உயிரி ழந்தார். இதுகுறித்து உடையார் பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT