கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் நாகை எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து, நாகை எம்எல்ஏ முகம்மது ஷா நவாஸ் கோரிக்கை மனு அளித்தார. அதில், நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில், கடல் கொந்தளிப்பின் காரணமாக கடல் நீர் உட்புகுந்ததில் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால், மீனவ கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஏற்கெனவே இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு, அமைச்சர்கள் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். கடல் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, தொகுதி மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.