Regional02

நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் - பட்டாசு வெடிப்பதை கண்காணிக்கும் பணியில் 2,747 போலீஸார் :

செய்திப்பிரிவு

நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க 2,747 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என நாகை எஸ்.பி ஜவஹர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ் குமார் உத்தரவின்படி, தஞ்சாவூர் காவல் சரகத்தை சேர்ந்த நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள் சிறப்பாக பண்டிகையை கொண்டாடும் வகையில், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், கடை வீதிகள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு உத்தரவுப்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதை கண்காணிக்க சிறப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 385 போலீஸார், மயிலாடுதுறை மாவட்டத்தில் 407 போலீஸார், தஞ்சாவூர் மாவட்டத்தில் 819 போலீஸார், திருவாரூர் மாவட்டத்தில் 1,136 போலீஸார் என மொத்தம் 2,747 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என நாகை எஸ்.பி ஜவஹர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT