Regional02

கற்போம் எழுதுவோம் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி :

செய்திப்பிரிவு

காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கற்போம் எழுதுவோம் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

இதற்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட சமக்கிர சிக்ஷா உதவி திட்ட அலுவலர் ஜோதீஸ்வர பிள்ளை, பள்ளியின் தலைமை ஆசிரியை (பொறுப்பு) சாந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில், எழுத்தறிவு, படிப்பறிவு ஆகியவற்றின் அவசியம், பெண் குழந்தைகளை பாதுகாக்கும் 1098 எண் அவசியம் குறித்தும், பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வயது வந்தோர் கல்வி ஆகியவை குறித்து ஆடல், பாடல், கூத்து மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியை பள்ளியின் என்சிசி அலுவலர் ராஜா, பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ஜி.டி.பாபு ஆகியோர் ஒருங் கிணைத்தனர்.

முடிவில், காட்பாடி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் நைரா பானு நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT