கரோனா பெருந் தொற்று குறைந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தொட்டியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி. 
Regional03

மாணவர்களுக்கு வரவேற்பு :

செய்திப்பிரிவு

கரோனா தொற்றுக் கால ஊரடங்கிற்குப் பிறகு 1 முதல் 8-ம் வகுப்பிற்கான பள்ளிகள் நேற்று முன்தினம் முதல் செயல்படத் தொடங்கியது. ஆனாலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையின் காரணமாக நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்படவில்லை. நேற்று பள்ளிகள் இயங்கத் தொடங்கிய நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, தொட்டியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குச் சென்று, பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்பு வழங்கியும், மேலாடைகள் வழங்கியும் வரவேற்றார்.

அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலர் சிவராமன் மற்றும் ஆசிரி யர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT