Regional01

அபகரிக்கப்பட்ட நிலம் மீட்பு :

செய்திப்பிரிவு

ராஜபாளையத்தைச் .சேர்ந்தவர் ராமலெட்சுமி. இவர், தென்காசி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகார் அளித்திருந் தார். அதில், தென்காசி மாவட்டம், திருவேங்கடத்தில் உள்ள தனக்குச் சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த சுபா என்பவர் போலி ஆவணங்கள் மூலம் உரிமை கோருவதாகவும், அந்த நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

போலீஸார் விசாரணை யில் அந்த நிலம் ராமலெட் சுமிக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. ரூ.5 லட்சம் மதிப்புள்ள அந்த நிலத்தை மீட்டு எஸ்பி கிருஷ்ணராஜ் முன்னிலையில் ஆவணம் ராமலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT