Regional02

2 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேலூரில் இருந்து பனமடங்கி வரை செல்லும் அரசுப் பேருந்தின் கண்ணாடியை கிருஷ்ணாபுரம் அருகே மர்ம நபர்கள் உடைத்து தப்பியுள்ளனர். இதுகுறித்து, பனமடங்கி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.அதேபோல், காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கிச் சென்ற தடம் எண் 9 பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுகுறித்து, கே.வி.குப்பம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT