Regional02

பட்டாசு தொழிலாளர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கிய விருதுநகர் ஆட்சியர் :

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே மாரியம்மாள் பயர் ஒர்க்ஸ் ஆலையில் 12.2.2021-ல் நடந்த வெடி விபத்தில் மரணமடைந்த 26 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.52 லட்சத்துக்கான காசோலைகளையும், காயமடைந்த 26 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.13 லட்சத்துக்கான காசோலைகளையும் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்.

மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கரோனா தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த 47 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.1.41 கோடி நிவாரணத் தொகையையும், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் 12 பயனாளிகளுக்கு தலா ரூ.5,500 வீதம் ரூ.66 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்களையும் ஆட்சியர் வழங்கினார்.

SCROLL FOR NEXT