Regional02

கரோனா நிதி கோரி தூய்மை பணியாளர் போராட்டம் :

செய்திப்பிரிவு

கரோனா சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தனர். அதில் கூறியிருப்ப தாவது:

கரோனா முதல் அலையில் இருந்து ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களாகப் பணிபுரிகிறோம்.

அப்போதைய அதிமுக அரசு துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு மாத கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் இதுவரை கூடுதல் ஊதியம் வழங்கப்படவில்லை. தற்போதைய அரசு எங்களுக்கு கரோனா சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.15,000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

SCROLL FOR NEXT