தச்சநல்லூர் வள்ளலார் மையத்தில் நேரு இளையோர் மையம், நல்லதை பகிர்வது நம் கடமை குழு, பாரதி முத்தமிழ் மன்றம் ஆகியவை இணைந்து சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழாவை நடத்தியது. மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பாரதி முத்தமிழ் மன்ற செயலாளர் கோ. கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் சங்கர் வரவேற்றார். நல்லதை பகிர்வது நம் கடமை குழு ஒருங்கிணைப்பாளர் மு.வெ.ரா தொடக்க உரையாற்றினார். கம்பன் இலக்கிய சங்க பொருளாளர் மு.அ.நசீர் வாழ்த்துரை வழங்கினார். தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் பரிசுகளை வழங்கினார். தச்சநல்லுார் மக்கள் நல மன்ற பொறுப்பாளர் அரிஹர சிவன் நன்றி கூறினார்.