திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2022-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக, திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்டார். அதன்படி, மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 13,63,458. ஆண்கள் 6,67,074, பெண்கள் 6,96,271, இதர வகையினர் 113. மாவட்டத்தில் மொத்தம் 1,483 வாக்குச்சாவடிகள் உள்ளன.
தென்காசி
சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளர் விவரம்:தொகுதி ஆண்கள் பெண்கள் இதரர்மொத்தம்திருநெல்வேலி 1,42,903 1,49,612 64 2,92,579அம்பாசமுத்திரம் 1,18,978 1,26,225 4 2,45,207பாளையங்கோட்டை 1,34,344 1,39,800202,74,164நாங்குநேரி 1,37,2161,42,194 14 2,79,421ராதாபுரம் 1,33,6331,38,440 142,72,087