Regional02

55 நலிவுற்ற ஏழை பிராமணர் குடும்பங்களுக்கு வேட்டி, சேலை :

செய்திப்பிரிவு

வேலூரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு 55 நலிவுற்ற ஏழை பிராமணர் குடும்பங்களுக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

வேலூரில் நடைபெற்ற பிராமணர் சங்க கூட்டத்துக்கு கிளை தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சேகர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மகளிரணி செயலாளர் ராதாமணி பாலசுப்பிரமணி வரவேற்றார். ஆலோசகர் சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு 55 நலிவுற்ற ஏழை பிராமணர் குடும்பங்களுக்கு வேட்டி, சேலை மற்றும் இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில், சங்க செய்தி தொடர்பாளர் ராஜா நன்றி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், அனைத்து நாட்களிலும் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்த உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT