Regional02

ஓட்டலை சேதப்படுத்திய 2 இளைஞர்கள் கைது :

செய்திப்பிரிவு

சூளகிரியில் தேசிய நெடுஞ் சாலையோரம் தனியார் ஓட்டல் உள்ளது. இங்கு மேலாளராக மருதாண்டப்பள்ளியைச் சேர்ந்த ஹரீஷ் (22) என்பவர் பணிபுரி கிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஓட்டலுக்கு ஓசூர் ஜனப்பர் தெருவைச் சேர்ந்த கணேஷ் (26), ராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் (27), கார்த்திக், மணி ஆகிய 4 பேரும் சாப்பிட வந்தனர்.

சாப்பிட்ட பின்னர் உணவுக் கான தொகையை செலுத்த மறுத்து ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, கடை மேலாளர் ஹரீஷ் விசாரித்தபோது அவரை தாக்கினர். மேலும், கடையில் இருந்த கணினி, ஸ்வைப்பிங் இயந்திரம் உள்ளிட்டவைகளை உடைத்து சேதப்படுத்தினர். இதில்,காயமடைந்த ஹரீஷ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சூளகிரி போலீஸார் கணேஷ், அர்ஜுன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT