Regional01

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் : பரமக்குடி பள்ளி மாணவர்கள் வெற்றி :

செய்திப்பிரிவு

தமிழ்நாடு ஜூடோ சங்கத்தின் சார்பில் திருச்சி தொட்டியத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான ஜூடோ போட்டிகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் இருந்து 800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

சப் ஜூனியர் பெண்கள் பிரிவில் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநய முதல் இடத்தையும், சப் ஜூனியர் ஆண்கள் பிரிவில் சரவணவேல் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இருவரையும் பள்ளிச் செயலாளர் லெனின் குமார், தலைமையாசிரியர் ஜஸ்டின் ஞானசேகர், கல்விக்குழு உறுப்பினர் பூபாலன், உடற்கல்வி இயக்குநர் நாகசாமி, உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார், தினேஷ்குமார் ஆகியோர் பாராட்டினர்.

SCROLL FOR NEXT