ஓ.பன்னீர்செல்வம் 
Regional01

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் : ஓபிஎஸ் இன்று மரியாதை :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக்.30-ல் தேவர் குருபூஜை விழாவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் மரியாதை செலுத்தினர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம், தனது மனைவி இறந்த துக்க திதி நாளை முன்னிட்டு அன்றைய தினம் பங்கேற்கவில்லை. மேலும் முன்னாள் முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான கே.பழனிச்சாமி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவர் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (நவ.1) பகல் 12 மணிக்கு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதனை முன்னிட்டு மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.

SCROLL FOR NEXT